தேசிய செய்திகள்

டெல்லி முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித் காலமானார்

டெல்லி முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஷீலா தீட்சித் காலமானார்.

தினத்தந்தி

புதுடெல்லி

காங்கிரஸ் மூத்த தலைவரும், டெல்லி முன்னாள் முதல்-அமைச்சருமான ஷீலாதீட்சித் ( 81) காலமானார். ஷீலா தீட்சித் 1998 ஆம் ஆண்டு முதல் 2013 வரை தொடர்ந்து 15 ஆண்டுகள் டெல்லியின் முதலமைச்சராக பதவி வகித்தவர் ஆவார்.

ஷீலா தீட்சித் மார்ச் 2014 முதல் ஆகஸ்ட் 2014 வரை கேரள மாநில ஆளுநராகப் பதவி வகித்தார். தற்போது இவர் டெல்லி மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்தார். சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் வடகிழக்கு டெல்லியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

இன்று காலை உடல்நிலை பாதிப்பால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஷீலா தீட்சித் சிகிச்சை பலனளிக்காமல் காலமானார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்