தேசிய செய்திகள்

கர்நாடக முன்னாள் மந்திரி கைது: மத்திய அரசு மீது ராகுல் காந்தி தாக்கு

கர்நாடக முன்னாள் மந்திரி கைது செய்யப்பட்ட விவகாரத்தில், மத்திய அரசின் மீது ராகுல் காந்தி கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

கர்நாடக முன்னாள் மந்திரியும், காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவருமான டி.கே.சிவக்குமார், நிதி மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். இதை கண்டித்து கர்நாடகா மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் காங்கிரசார் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த கைது தொடர்பாக மத்திய அரசுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் தளத்தில் கூறுகையில், அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ. மூலம் மத்திய அரசு மேற்கொண்டு வரும் பழிவாங்கல் நடவடிக்கைகளுக்கு, டி.கே.சிவகுமார் கைது செய்யப்பட்ட சம்பவம் மற்றுமொரு உதாரணம். இது தனிநபர்களை குறிவைத்து நடத்தப்படும் தாக்குதலாகும் என்று குற்றம் சாட்டி உள்ளார்.

முன்னதாக, டி.கே.சிவக்குமார் கைது நடவடிக்கைக்கு காங்கிரஸ் கட்சியும் கண்டனம் தெரிவித்து இருந்தது. மத்திய அரசின் இத்தகைய அச்சுறுத்தல் நடவடிக்கைகளுக்கு அடிபணியமாட்டோம் எனவும், அரசின் ஜனநாயக விரோத போக்குகளுக்கு எதிராக கடினமான கேள்விகளை முன்வைப்போம் என்றும் அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் மணிஷ் திவாரி கூறினார்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு