கொல்கத்தா,
மக்களவையின் முன்னாள் சபாநாயகராக இருந்தவர் சோம்நாத் சாட்டர்ஜி (வயது 88). மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் தலைவராகவும் இருந்துள்ள இவருக்கு மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டு உள்ளது. உடல் நிலை மோசமடைந்த நிலையில், நேற்றிரவு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இந்நிலையில், மருத்துவர்கள் அளித்த சிகிச்சையை அடுத்து அவரது நிலைமை சீரடைந்து உள்ளது என தகவல் தெரிவிக்கின்றது.
நாடாளுமன்ற மக்களவையில் கடந்த 2004ம் ஆண்டு முதல் 5 வருடங்கள் வரை இவர் சபாநாயகராக பதவி வகித்துள்ளார்.