தேசிய செய்திகள்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு சிறப்பு பாதுகாப்பு குழு எனப்படும் கருப்பு பூனைப்படை பாதுகாப்பு அளிக்கப்பட்டு வந்தது. சமீபத்தில், அந்த பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது.

இதையடுத்து, அவருக்கும், அவருடைய மனைவிக்கும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இதன்படி, ரிசர்வ் போலீஸ் படையின் ஆயுதம் தாங்கிய 45 கமாண்டோக்கள், 24 மணி நேரமும் இருவருக்கும் அவர்களது வீட்டிலும், அவர்கள் செல்லும் இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பார்கள்.

மேலும், அவர்கள் செல்லும் இடங்களுக்கு முன்கூட்டியே சென்று பாதுகாப்பு ஒத்திகையிலும் ஈடுபடுவார்கள். சிறப்பு பாதுகாப்பு குழுவுடன் ஆலோசனை நடத்திய பிறகு, விரைவில் பாதுகாப்பு பொறுப்பை மத்திய ரிசர்வ் போலீஸ் படை ஏற்க உள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்