தேசிய செய்திகள்

டிரம்ப் விருந்து நிகழ்ச்சி; முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் புறக்கணிக்கப்போவதாக தகவல்

ஜனாதிபதி மாளிகையில் நாளை நடைபெறும் டிரம்பிற்கு விருந்தளிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்காமல் புறக்கணிக்க மன்மோகன் சிங் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

புதுடெல்லி,

இந்தியாவுக்கு வருகை தந்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு கவுரவமளிக்கும் விதமாக நாளை (செவ்வாய்கிழமை) ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அதிகாரப்பூர்வ விருந்தளிக்கிறார்.

இந்த விருந்தில் கலந்து கொள்ள வருமாறு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், லோக்சபா காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோருக்கு ஜனாதிபதி மாளிகை அழைப்பு விடுத்துள்ளது.

ஆனால், இந்த விருந்தில் கலந்து கொள்ள முடியாது என மன்மோகன் சிங் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடல் நலம் காரணமாக பங்கேற்க முடியாது என மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

எனினும் காங்கிரஸ் தலைவரும் காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவருமான சோனியா காந்திக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்பதால் காங்கிரஸ் கட்சி இந்த விருந்தில் கலந்து கொள்ளப்போவதில்லை என்று முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், லோக்சபா காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோரும் விருந்தை புறக்கணிக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு