தேசிய செய்திகள்

முன்னாள் பிரதமர் நேரு நினைவு தினம்: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மலரஞ்சலி

முன்னாள் பிரதமர் நேரு நினைவு தினத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அவருக்கு மலரஞ்சலி செலுத்தினார்.

புதுடெல்லி,

முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவின் நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு சாந்தி வனத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் மற்றும் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினரான ராகுல் காந்தி மலரஞ்சலி செலுத்தினார்.

SCROLL FOR NEXT