தேசிய செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உடல்நிலையில் முன்னேற்றம் - மருத்துவர்கள் தகவல்

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தினத்தந்தி

புதுடெல்லி,

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி (வயது 84) டெல்லியில் உள்ள ஆர்.ஆர்.ராணுவ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு கடந்த 10-ந் தேதி முதல் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு மூளையில் இருந்த ரத்த கட்டி ஆபரேஷன் மூலம் அகற்றப்பட்டது. மேலும் கொரோனா தொற்று இருப்பதும் உறுதி செய்யப்பட்டது. நுரையீரலில் தொற்று இருப்பதால் அதற்காகவும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

கோமா நிலையில் இருக்கும் பிரணாப் முகர்ஜிக்கு வென்டிலேட்டர் உதவியுடன் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரது ரத்த அழுத்தம், நாடித்துடிப்பு, இதயத்தின் செயல்பாடு சீராக இருப்பதாகவும், சிறுநீரகத்தின் செயல்பாடு மேம்பட்டு உள்ளதாகவும், இதனால் உடல் நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்