தேசிய செய்திகள்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு தினம் - காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 33வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

தினத்தந்தி

புதுடெல்லி,

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 33வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதேபோல் ஏராளமான காங்கிரஸ் கட்சியினரும் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினம் மே 21ம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது. தேர்தல் பிரசாரத்துக்காக ஸ்ரீபெரும்புதூர் வந்த ராஜீவ் காந்தி 1991ம் ஆண்டு குண்டு வைத்து கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் உயிரிழந்த ஸ்ரீபெரும்புதூரில் அவருக்கு நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.

இதே போல் டெல்லியில் அவரது தாத்தா ஜவஹர்லால் நேரு, தாய் இந்திரா காந்தி, சகோதரர் சஞ்சய் காந்தி, ஆகியோர் அடக்கம் செய்யப்பட்டுள்ள 'வீர் பூமி' என்ற இடத்திலும் ராஜீவ் காந்திக்கு நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்