புதுடெல்லி,
மேற்குவங்காளத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. அங்கு ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் பலர் பாரதீய ஜனதா கட்சிக்கு தாவி வருகிறார்கள்.
இதற்கிடையே மேற்குவங்காளத்தின் நட்டியா மாவட்டம் சந்திப்பூர் தொகுதி திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. அரிந்தம் பட்டார்ச்சார்யா நேற்று அக்கட்சியில் இருந்து திடீரென விலகி பாரதீய ஜனதா கட்சியில் சேர்ந்தார்.
தலைநகர் டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கட்சியின் பொதுச்செயலாளர் கைலாஷ் விஜயவர்க்கியா முன்னிலையில் அவர் பா.ஜனதாவில் சேர்ந்தார்.