Image Courtesy : ANI 
தேசிய செய்திகள்

ஒடிசா முதல்-மந்திரியுடன் இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டோனி பிளேர் சந்திப்பு

டோனி பிளேருக்கு சொந்தமான நிறுவனத்துடன் ஒடிசா அரசாங்கம் கடந்த 21-ந்தேதி இருதரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

தினத்தந்தி

புவனேஸ்வர்,

இந்தியாவிற்கு வருகை தந்துள்ள இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் டோனி பிளேர், ஒடிசா மாநிலத்தின் முதல்-மந்திரி நவீன் பட்நாயக்கை நேரில் சந்தித்துப் பேசினார். புவனேஸ்வரில் உள்ள நவீன் நிவாஸ் இல்லத்தில் வைத்து இந்த சந்திப்பு நடைபெற்றது.

இந்த சந்திப்பின் போது மாநில பொருளாதார வளர்ச்சித் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக முதல்-மந்திரி அலுவலகம் தெரிவித்துள்ளது. டோனி பிளேருக்கு சொந்தமான டி.பி.ஐ. நிறுவனத்துடன் ஒடிசா அரசாங்கம் கடந்த 21-ந்தேதி இருதரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்த நிறுவனம் ஒடிசா மாநிலத்திற்கான பொருளாதார வளர்ச்சி கொள்கைகள் குறித்து மூலோபாய ஆலோசனைகளை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது