தேசிய செய்திகள்

போராட்டத்தில் பங்கேற்ற முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு எலும்பு முறிவு

டெல்லியில் காங்கிரஸ் பேரணியில் பங்கேற்ற முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் இன்று நடைபெற்ற காங்கிரஸ் பேரணியில் பங்கேற்ற முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. ப.சிதம்பரத்தை காவல்துறையினர் தாக்கியதால் இடது விலா பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. காவலர்கள் தள்ளிவிட்டதில் ப.சிதம்பரத்திற்கு எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும்  காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குற்றம் சாட்டியுள்ளார். 

நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல்காந்திக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதையடுத்து, மத்திய அரசை கண்டித்து அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்