கோடா,
இந்நிலையில், அதை சுட்டிக்காட்டி, அவருக்கு எதிராக ராஜஸ்தான் மாநிலம் கோடாவில் உள்ள கூடுதல் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில், அந்த மாவட்ட பா.ஜனதாவின் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு தலைவர் அசோக் சவுத்ரி தேசதுரோகம் மற்றும் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
தனது மனுவில், இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் விரும்புவது பாராட்டத்தக்கது. ஆனால், இந்தியா பேச்சுவார்த்தையில் அக்கறை காட்டவில்லை என்று பாகிஸ்தான் மீதான அன்பை வெளிப்படையாக மணிசங்கர் அய்யர் காட்டியுள்ளார். இந்தியாவை இழிவுபடுத்தி உள்ளார். அவரது கருத்து, தேசதுரோகத்தை சேர்ந்தது. ஆகவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
இந்த மனுவை ஏற்றுக்கொண்ட கோர்ட்டு, 20-ந் தேதி விசாரணை நடத்துகிறது.