தேசிய செய்திகள்

பா.ஜ.க.,வில் இணைந்த உத்தர பிரதேச முன்னாள் டி.ஜி.பி.

காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகளை சேர்ந்த பிரமுகர்களும் பா.ஜ.க.,வில் இணைந்தனர்.

தினத்தந்தி

லக்னோ,

உத்தரப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் டி.ஜி.பி. விஜய் குமார், பாரதிய ஜனதா கட்சியில் இன்று காலை இணைந்தார். உத்தரப் பிரதேச மாநில டிஜிபியாக பணியாற்றி கடந்த ஜனவரி மாதம் பணியில் இருந்து ஓய்வுபெற்ற விஜய் குமாருடன், அவரது மனைவியும் பா.ஜ.க.,வில் இணைந்துள்ளார். உ.பி. துணை முதல்-மந்திரி பிரஜேஷ் பதக் முன்னிலையில் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகளை சேர்ந்த பிரமுகர்களும் இணைந்தனர்.

பா.ஜ.க.,வில் இணைந்த பிறகு செய்தியாளர்களுடன் விஜய் குமார் பேசுகையில், பா.ஜ.க.,வின் கொள்கைகளால் நான் ஈர்க்கப்பட்டேன். மக்களுக்காக பணியாற்றுவதற்கு இங்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு மேம்பட்டுள்ளது என்றார்.

கடந்த மாதம் கொல்கத்தா ஐகோர்ட்டு நீதிபதி அபிஜீத் கங்கோபாத்யாய தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜ.க.,வில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்