பெங்களூரு,
பெங்களூரு ஜெயநகர் எல்.ஐ.சி.காலனி 3-வது பிளாக்கில் ஒரு வீட்டில், கொரோனா தடுப்பூசியான ரெம்டெசிவரை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்ற ஜெயநகரை சேர்ந்த தனராம் பட்டேல்(வயது 28), பைரசந்திராவில் வசித்து வரும் சம்பா லால்(23), ஓ.எம்.பி.ஆர் லே-அவுட்டில் வசிக்கும் சங்கர்(28) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இதுபோல இந்திராநகர் 100 அடி ரோட்டில் ரெம்டெசிவர் தடுப்பூசியை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்ற தோப்பனஹள்ளியை சேர்ந்த விஷ்ணுவர்தன் என்பவரை இந்திராநகர் போலீசார் கைது செய்தனர். கைதான 4 பேர் மீதும் ஜெயநகர், இந்திராநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.