தேசிய செய்திகள்

திண்பண்டம் வாங்க கொடுத்த பத்து ரூபாய் நாணயம் 4 வயது சிறுமி உயிரை பறித்தது

மகாராஷ்டிராவில் சாப்பிட ஏதேனும் வாங்கி கொள் என கொடுத்த பத்து ரூபாய் நாணயத்தினை விழுங்கிய 4 வயது சிறுமி பலியானாள்.

தினத்தந்தி

நாசிக்,

மகாராஷ்டிராவின் நாசிக் நகரில் சந்த்கிரி என்ற பகுதியில் வசித்து வந்த சிறுமி ஷாலினி ஹண்ட்கே (வயது 4). தனது தாயாரிடம் சாப்பிட ஏதேனும் பண்டம் தரும்படி கேட்டு இருக்கிறாள். அதற்கு சிறுமியிடம் அருகிலுள்ள கடைக்கு சென்று பண்டம் வாங்கி கொள் என கூறி பத்து ரூபாய் நாணயத்தினை அவர் கொடுத்துள்ளார்.

அதனை வாங்கி கொண்ட சிறுமி நாணயத்தினை வைத்து விளையாடி இருக்கிறாள். தற்செயலாக அந்த நாணயத்தினை அவள் விழுங்கியுள்ளாள்.

இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக உள்ளூர் மருத்துவமனைக்கு சிறுமியை கொண்டு சென்றுள்ளனர். அதன்பின் உயர்தர சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைக்கு சிறுமியை கொண்டு சென்றுள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுமி மரணம் அடைந்து விட்டாள்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்