தேசிய செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனம்; தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா கட்டுப்பாடு காரணமாக இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டது. 300 ரூபாய் கட்டணத்தில் முன்பதிவு செய்த பக்தர்கள் மற்றும் வி.ஐ.பி. தரிசனத்தில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

எனினும், உண்டியல் காணிக்கை கோடிக்கணக்கில் வசூலானது. முடி காணிக்கைக்கும் அனுமதி அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசன அறிவிப்பினை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டு உள்ளது.

இதன்படி, சித்தூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்களுக்கு நாளை காலை 6 மணி முதல் சோதனை அடிப்படையில் டிக்கெட்டுகள் விநியோகிக்கப்படும் என தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்