தேசிய செய்திகள்

பிரிவினைவாதம் பேசினால் சகித்துக்கொள்ள மாட்டோம் : சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத்

இந்தியாவில் இருந்து காஷ்மீருக்கு சுதந்திரம் அளிக்க வேண்டும் என யாராவது பேசினால் சகித்துக்கொள்ள மாட்டோம் என்று சிவசேனா எம்.பி தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

மும்பை,

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன. அந்த வகையில், மராட்டிய மாநிலம் மும்பையில் உள்ள மிகவும் புகழ்பெற்ற கேட் வே ஆப் இந்தியா பகுதியில் நேற்று முன் தினம் திரண்ட நூற்றுக்கணக்கான மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விடிய விடிய மாணவர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் போராட்டத்தில் கலந்து கொண்டனர். இன்று காலை போராட்டக்கார்களை கேட் வே ஆப் இந்தியாவில் இருந்து வெளியேற்றிய போலீசார் ஆசாத் மைதானத்திற்கு அழைத்துச்சென்றனர்.

முன்னதாக, நேற்று இரவு நடைபெற்ற போராட்டத்தின் போது, காஷ்மீருக்கு விடுதலை வேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகையை போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் ஏந்தியபடி நின்றார்.

இந்த விவகாரம் செய்திகளில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத், காஷ்மீர் விடுதலை என்ற வாசகங்கள் அடங்கிய பதாகையை வைத்திருந்தவர், இணையதள கட்டுப்பாடு உள்பட காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளில் இருந்து விடுதலை வேண்டும் என்ற நோக்கத்துடனேயே வைத்திருந்ததாக விளக்கம் அளித்திருப்பதாக இன்று காலை செய்தித்தாள்களில் பார்த்தேன். இந்தியாவில் இருந்து காஷ்மீருக்கு சுதந்திரம் வேண்டும் என்று யாராவது பேசினால் நாங்கள் சகித்துக்கொள்ள மாட்டோம் என்றார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது