லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் மகோபா மாவட்டம் கப்ரால் பகுதியில் ஒரு சரக்கு வாகனம் மீது ஒரு மோட்டார் சைக்கிள் மோதியது. உடனே, மோட்டார் சைக்கிளின் பெட்ரோல் டேங்க் தீப்பிடித்துக் கொண்டது. இதில், மோட்டார் சைக்கிளில் சென்ற அனில் பிரஜாபதி (வயது 25), அவருடைய நண்பர் பிஜ்ஜு (17), 4 வயது சிறுவன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.