தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் சுரேஷ் உடல் 21 குண்டுகள் முழங்க அடக்கம்

ஜம்மு காஷ்மீரில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் சுரேஷ் உடல் 21 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது. #jammuandkashmir | #CeasefireViolation

தருமபுரி,

காஷ்மீரில் ஆர்.எஸ். புரா செக்டரில், எல்லை பாதுகாப்பு படையின் நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் படையினர் நேற்றுமுன்தினம் இரவு 9 மணிக்கு துப்பாக்கிச்சூடு நடத்த தொடங்கினர். அத்துடன் சரமாரியாக குண்டுகளையும் வீசினர். சிறிய ரக பீரங்கி தாக்குதலும் நடந்தது.12-க்கும் மேற்பட்ட இந்திய எல்லை பாதுகாப்பு படையின் நிலைகள் மீது பாகிஸ்தான் நடத்திய தாக்குதலுக்கு, இந்திய தரப்பிலும் எல்லை பாதுகாப்பு படையினரால் சரியான பதிலடி கொடுக்கப்பட்டது.பாகிஸ்தான் தாக்குதலை எதிர்த்து வீரமுடன் சண்டையிட்ட எல்லை பாதுகாப்பு படையின் தலைமைக்காவலர், சுரேஷ் வீர மரணம் அடைந்தார். இவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்.

பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் வீர மரணமடைந்த தமிழக வீரர் சுரேஷின் உடல் இன்று காலை கோவை விமானநிலையம் கொண்டு வரப்பட்டது. பின்னர் அங்கிருந்து இருந்து சொந்த ஊரான தருமபுரி மாவட்டம் பண்டாரசெட்டிப்பட்டிக்கு கொண்டு வரப்பட்டது.பண்டாரசெட்டிப்பட்டியில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. இறுதிச்சடங்குகளும் செய்யப்பட்டன. பின்னர் அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. #jammuandkashmir | #CeasefireViolation

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு