தேசிய செய்திகள்

உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி கூட்டணியில் இருந்து நிஷாத் கட்சி விலகல் - பா.ஜனதா அணிக்கு செல்கிறது

உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி கூட்டணியில் இருந்து நிஷாத் கட்சி விலகியது. மேலும் பா.ஜனதா அணிக்கு செல்ல உள்ளது.

தினத்தந்தி

லக்னோ,

உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி-பகுஜன் சமாஜ் இணைந்த மகா கூட்டணியில் நிஷாத் கட்சியும் இணைந்திருந்தது. ஆனால் சமாஜ்வாடியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இந்த கூட்டணியில் இருந்து நிஷாத் கட்சி வெளியேறியது. அந்த கட்சி பா.ஜனதாவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய முடிவு செய்துள்ளது. இதைத்தொடர்ந்து உடனடி நடவடிக்கையாக, நிஷாத் கட்சிக்கு அளிக்கப்பட்டு இருந்த தொகுதிகளுக்கு சமாஜ்வாடி வேட்பாளர்களை அறிவித்தது. அதன்படி கோரக்பூர் தொகுதியில் ராம் புகல் நிஷாத்தும், கான்பூர் தொகுதிக்கு ராம் குமார் நிஷாத்தும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

நிஷாத் கட்சி விலகிய நிலையில், சமாஜ்வாடியின் வேட்பாளர்கள் இருவரும் நிஷாத் இனத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு