தேசிய செய்திகள்

ஆட்களை மிரட்டி பணம் பறிக்கும் வழக்கு: தேடப்படும் குற்றவாளியாக தாவூத் இப்ராகிம் அறிவிப்பு

ஆட்களை மிரட்டி பணம் பறிக்கும் கஸ்கருக்கு எதிரான வழக்கில் அவரது சகோதரரான மும்பை நிழலுலக தாதா தாவூத் இப்ராகிம் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு உள்ளார்.

கஸ்கருக்கு தொழிலதிபர் பங்கஜ் கேங்கார் என்பவர் நிதி உதவி செய்து வந்துள்ளார். அவரை சமீபத்தில் தானே நகர போலீசார் கைது செய்தனர்.

இது தொடர்புடைய வழக்கில் கஸ்கருக்கு தாவூத் இப்ராகிமின் நெருங்கிய கூட்டாளியான சோட்டா ஷகீல் உதவி செய்து வந்துள்ளார் என தெரிய வந்துள்ளது. ஷகீல் பில்டர்கள் மற்றும் தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறித்துள்ளார். இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற 4 பேருடன் ஷகீலும் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு உள்ளார்.

இந்நிலையில், இந்த வழக்கில் இந்தியாவில் இருந்து தப்பி வெளிநாட்டில் வசித்து வரும் மும்பை நிழலுலக தாதா தாவூத் இப்ராகிம் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு உள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்