தேசிய செய்திகள்

நிறைமாத கர்ப்பிணியான நடிகை பிரணிதா

நடிகை பிரணிதா நிறைமாத கர்ப்பிணியானார்.

தினத்தந்தி

பெங்களூரு: கன்னடம், தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிப்படங்களில் பிரபல நடிகையாக இருந்து வந்தவர் பிரணிதா. திரைஉலகில் பிசியாக நடித்துக் கொண்டிருந்த பிரணிதா கடந்த ஆண்டு(2021) திடீரென நிதின் ராஜு என்பவரை திருமணம் செய்து கொண்டார். இது பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் ஆகும். திருமணத்திற்கு பிறகு பெங்களூருவில் கணவருடன் வசித்து வரும் பிரணிதா அடிக்கடி தனது புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார். தற்போது கர்ப்பமாக இருக்கும் பிரணிதா சமீபத்தில் 'போட்டோ சூட்' நடத்தி உள்ளார்.

அதில் அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதை விதவிதமாக புகைப்படம் எடுத்துக் கொண்டார். தற்போது அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளன.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது