அமிர்தசரஸ்,
வரும் திங்கள் கிழமை முதல் பஞ்சாப் மாநிலம் வருபவர்கள் முழுமையாக தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் அல்லது கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது. அண்டை மாநிலமான இமாசல பிரதேசம் மற்றும் ஜம்மு யூனியன் பிரதேசத்தில் இருந்து வருபவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுவார்கள் என்றும் பஞ்சாப் அரசு தெரிவித்துள்ளது.
கல்வி நிலையங்களில் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் மட்டுமே நேரடியாக வகுப்புகள் வருவதற்கு அனுமதி அளிக்கப்படும் எனவும் ஆன்லைன் வகுப்புகளும் தொடர்ந்து நடைபெறும் எனவும் மாணவர்கள் விருப்பத்தின் அடிப்படையில் இதில் பங்கேற்கலாம் என்றும் மாநில அரசு கூறியுள்ளது.