தேசிய செய்திகள்

வருங்கால வைப்புநிதி வட்டி 8.5 சதவீதம் - மத்திய அரசு ஒப்புதல்

வருங்கால வைப்புநிதி 8.5 சதவீத வட்டி விகிதத்துக்கு மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

கடந்த 2019-2020 நிதியாண்டில் தொழிலாளர் வருங்கால வைப்புநிதிக்கான (பி.எப்.) வட்டி விகிதம் 8.65 சதவீதத்தில் இருந்து 8.5 சதவீதமாக குறைக்கப்பட்டது. கடந்த 7 ஆண்டுகளில் இதுதான் மிகக்குறைவு ஆகும்.

கடந்த 2020-2021 நிதியாண்டுக்கு இதே வட்டி விகிதத்தை தொடருவது என்று கடந்த மார்ச் மாதம் நடந்த வைப்புநிதி அமைப்பின் உயரிய அமைப்பான மத்திய அறங்காவலர்கள் வாரிய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இந்தநிலையில், 8.5 சதவீத வட்டி விகிதத்துக்கு மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. அதனால், வைப்புநிதி அமைப்பில் உள்ள 5 கோடிக்கு மேற்பட்ட சந்தாதாரர்களின் கணக்குகளில் இந்த வட்டி வரவு வைக்கப்படும். தீபாவளியையொட்டி, அவர்களுக்கு இது நல்ல சய்தியாக அமையும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து