புதுடெல்லி,
குஜராத் மாநிலத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காந்திநகர் மாநகராட்சி மற்றும் 3 நகராட்சிகளுக்கு தேர்தல் நடந்தது. அத்துடன், காலியாக உள்ள 104 வார்டுகளுக்கும் வாக்குப்பதிவு நடந்தது.
நேற்று ஓட்டு எண்ணிக்கை நடந்தது. இதில், ஏற்கனவே காந்திநகர் மாநகராட்சியை பா.ஜனதா மீண்டும் தக்க வைத்துக்கொண்டது. ஒகா, தாரா ஆகிய நகராட்சிகளையும் மீண்டும் கைப்பற்றியது. ஆனால், பான்வத் நகராட்சியை பா.ஜனதாவிடம் இருந்து காங்கிரஸ் கைப்பற்றியது. காந்திநகர் மாநகராட்சியில் மொத்தம் உள்ள 44 வார்டுகளில் 41 வார்டுகளை கைப்பற்றி பா.ஜனதா அமோக வெற்றி பெற்றது.
இத்தேர்தலில் பா.ஜனதா அதிக இடங்களை கைப்பற்றியதற்காக, குஜராத் மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.