தேசிய செய்திகள்

ரூ.4 கோடி மதிப்பிலான மொபைல் போன்களுடன் கன்டெய்னர் லாரியை கடத்திய கும்பல்

ரூ.4 கோடி மதிப்பிலான மொபைல் போன்களுடன் கன்டெய்னர் லாரியை கும்பல் ஒன்று கடத்தி சென்றது.

தினத்தந்தி

அமராவதி,

ஆந்திர பிரதேசத்தின் நெல்லூர் நகரில் தகதர்த்தி பகுதி அருகே தேசிய நெடுஞ்சாலை 16-ல் கன்டெய்னர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் மொபைல் போன்கள் இருந்தன. கொல்கத்தா நோக்கி சென்ற லாரியை கார் ஒன்று பின்தொடர்ந்தது.

அதில் இருந்த அடையாளம் தெரியாத 3 பேர் கொண்ட கும்பல் லாரியை வழிமறித்து நிறுத்தினர். அவர்கள் லாரி ஒன்றையும் தங்களுடன் கொண்டு வந்திருந்தனர். லாரி மற்றும் ஓட்டுனர் இரண்டையும் கும்பல் ஆளில்லா பகுதிக்கு கடத்தி சென்றது.

அங்கு ஓட்டுனரை விடுவித்து விட்டு லாரியில் இருந்த மொபைல் போன்களை தங்களது லாரியில் ஏற்றி கொண்டு அவர்கள் தப்பி சென்றனர். அந்த மொபைல் போன்களின் மதிப்பு ரூ.4 கோடி என கூறப்படுகிறது. இதுபற்றிய தகவல் போலீசாருக்கு அளிக்கப்பட்டது. அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்