தேசிய செய்திகள்

டெல்லி நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கி சூடு ; பிரபல தாதா உள்பட 4 பேர் பலி

டெல்லி நீதிமன்ற வளாகத்தில் சுமார் 40 நிமிடம் துப்பாக்கி சூடு நடைபெற்றது. இதில் கோகி உள்பட 4 பேர் பலியானார்கள்

புதுடெல்லி:

அரியானா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு வந்த பிரபல தாதா ஜிதேந்தர் கோகி. இவர் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார். விசாரணைக்காக தாதா கோகி உள்ளிட்டோர் இன்று டெல்லி ரோகிணி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த கொண்டுவரப்பட்டனர்.

அறை எண் 207 யில் அவர்கள் சென்றபோது அவர்களை நோக்கி வக்கீல் உடையில் இருந்த கோகியின் எதிர்கோஷ்டியினர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.

பாதுகாப்புக்காக வந்து இருந்த போலீசார் எதிர்கோஷ்டியை நோக்கி சுட்டனர். அங்கு சுமார் 40 நிமிடம் துப்பாக்கி சூடு நடைபெற்றது. இதில் கோகி உள்பட 4 பேர் பலியானார்கள்

பட்டப்பகலில் நீதிமன்ற வளாகத்தில் நடந்த இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது. அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்