தேசிய செய்திகள்

பெண்கள் கல்லூரியில் ஊடுருவிய சமூக விரோதிகளுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்

டெல்லியில் பெண்கள் கல்லூரியில் ஊடுருவிய 10 சமூக விரோதிகளுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு உள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

தெற்கு டெல்லியில் கடந்த 6ந்தேதி நடந்த பெண்கள் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் புகுந்த கும்பல் ஒன்று மாணவிகளிடம் அத்துமீறியது. இதையடுத்து குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி மாணவிகள் போராட்டம் நடத்தினர்.

இதை தொடர்ந்து 11 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் மூலம் குற்றவாளிகளை அடையாளம் காண போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

இந்நிலையில் 18 முதல் 25 வயதுக்குட்பட்ட 10 இளைஞர்களை இவ்வழக்கு தொடர்பாக போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் பலரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கைது செய்த 10 பேர் டெல்லி நீதிமன்றம் ஒன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்து உள்ளனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்