தேசிய செய்திகள்

பீகார்: சத் பூஜையின் போது கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து - 30 பேர் காயம்

பீகாரில் சத் பூஜையின் போது கேஸ் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் 30 பேர் காயமடைந்துள்ளனர்.

அவுரங்கபாத்,

பீகாரின் அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள ஷாகஞ்ச் பகுதியை சேர்ந்தவர் அனில் கோஸ்வாமி. இவரின் வீட்டில் இன்று சத் பூஜை நடைபெற இருந்தது. இதற்க்காக அதிகாலை 2.30 மணியளவில் சமைத்து கொண்டிருந்தனர்.

அப்போது, கேஸ் சிலிண்டர் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இந்த பயங்கர விபத்தில் தீயை அணைக்க முயன்ற 7 போலீசார் உட்பட 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனையடுத்து, காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அவுரங்காபாத் சதார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இதில் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு