தேசிய செய்திகள்

ஓட்டலில் கியாஸ் சிலிண்டர் வெடித்து 2 பேர் உடல் சிதறி சாவு

விஜயநகரில் ஓட்டலில் கியாஸ் சிலிண்டர் வெடித்து 2 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.

தினத்தந்தி

விஜயநகர்:

விஜயநகர் மாவட்டம் கூட்லிகி தாலுகாவில் உள்ள கிராமத்தில் போரய்யா என்பவருக்கு சொந்தமான ஓட்டல் உள்ளது. நேற்று மதியம் அவர் ஓட்டலில் உணவு சமைத்து கொண்டு இருந்தார். அப்போது ஓட்டலில் திடீரென்று தீப்பிடித்தது. அந்த தீ ஓட்டல் முழுவதும் பரவி எரிந்தது. உடனே போரய்யா உள்பட 3 பேர் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். அப்போது, ஓட்டலில் இருந்த கியாஸ் சிலிண்டர் திடீரென்று வெடித்து சிதறியது.

இதில் 2 வாலிபர்கள் உடல் சிதறி பலியானாகள். போரய்யா காயமடைந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் குடகோட்டே போலீசார் விரைந்து வந்து 2 வாலிபர்களின் உடல்களை கைப்பற்றி விசாரித்தனர். மேலும் தீயணைப்பு படைவீரர்கள் விரைந்து வந்து ஓட்டலில் பிடித்த தீயை அணைத்தாகள். போலீஸ் விசாரணையில், பலியான வாலிபர்கள் குடகோட்டே பகுதியை சேர்ந்த சிவப்பா (வயது 28), ஸ்ரீகாந்த் (23) என்று தெரிந்தது.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை