புதுடெல்லி,
பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் மாற்றி அமைக்கும் திட்டத்தை சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசு கொண்டு வந்தது. புதுச்சேரி உள்பட 5 நகரங்களில் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. இது, வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது.
அதன்படி, நள்ளிரவுக்கு பதிலாக, தினந்தோறும் வர்த்தகம் தொடங்கும் நேரத்தில், அதாவது, காலை 6 மணிக்கு விலையை மாற்றி அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டது. (16ந் தேதி) முதல், இந்த நடைமுறை அமலுக்கு வந்தது.
இது குறித்து எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
பெட்ரோல் விலை 27 காசுகள் குறைந்து ரூ.67.15க்கும், டீசல் விலை 14 காசுகள் குறைந்து ரூ.56.89க்கும் விற்கப்படும். இந்த விலை உயர்வு நாளை காலை 6 மணி முதல் அமல் படுத்தப்படும்.