தேசிய செய்திகள்

கிழக்கு டெல்லி மக்களவைத் தொகுதியில் பா.ஜனதா சார்பில் காம்பீர் போட்டி

கிழக்கு டெல்லி மக்களவைத் தொகுதியின் பா.ஜனதா வேட்பாளராக முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் காம்பீர் போட்டியிடுகிறார். #GautamGambhir #BJP

தினத்தந்தி

புதுடெல்லி,

7 மக்களவைத் தொகுதிகள் உள்ள டெல்லியில், 4 தொகுதிகளுக்கு பா.ஜனதா ஏற்கெனவே தனது வேட்பாளரை அறிவித்திருந்தது. இந்நிலையில், மேற்கொண்டு 2 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பா.ஜனதா இன்று வெளியிட்டது.

அதன்படி கிழக்கு டெல்லியில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் காம்பீரும், புதுடெல்லியில் மூத்த தலைவர் மீனாட்டி லெகியும் போட்டியிடுகின்றனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன் காம்பீர் பா.ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். பிரதமர் மோடியின் கொள்கையை பார்த்து பா.ஜனதாவில் இணைந்ததாகவும். மக்களுக்கு சேவை செய்வதே தனது குறிக்கோள் என்றும் கூறி இருந்தார்.

டெல்லி மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியலும் முன்னதாக வெளியிடப்பட்டது. இதன்மூலம், கௌதம் காம்பீர் கிழக்கு டெல்லி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் அர்விந்தர் சிங் லவ்லியை எதிர்த்து போட்டியிட உள்ளார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்