தேசிய செய்திகள்

காசா அமைதி திட்டம்: பிரதமர் மோடி பாராட்டு

இஸ்ரேலும், ஹமாஸும் போர் நிறுத்த அமைதித் திட்டத்தின் முதல் கட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன

தினத்தந்தி

புதுடெல்லி,

இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே போரை முடிவுக்கு கொண்டு வர தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், போர் நிறுத்த அமைதித் திட்டத்தின் முதல் கட்ட ஒப்பந்தத்தில் இஸ்ரேலும் ஹமாஸும் கையெழுத்திட்டுள்ளன என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக டிரம்ப் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், இஸ்ரேலும் ஹமாஸும் போர் நிறுத்த அமைதித் திட்டத்தின் முதல் கட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. எங்களுடன் இணைந்து பணியாற்றிய கத்தார், எகிப்து மற்றும் துருக்கி நாடுகளின் மத்தியஸ்தர்களுக்கு நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம், என கூறியுள்ளார்.இந்நிலையில் பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

டிரம்பின் இஸ்ரேல்ஹமாஸ் போர் நிறுத்த அமைதித் திட்டத்தின் முதல் கட்ட ஒப்பந்தத்தை நாங்கள் வரவேற்கிறோம். இது பிரதமர் நெதன்யாகுவின் சிறப்பான தலைமையை எடுத்துரைக்கிறது. பிணைக்கைதிகள் விடுதலை செய்யும் வழியை உருவாக்கும். காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைக்கவும், அவர்களுக்கு நிம்மதியைத் தரும். காசாவில் நிலையான அமைதிக்கு வழிவகுக்கும், என்றும் நாங்கள் நம்புகிறோம், என்று பிரதமர் கூறியுள்ளார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து