தேசிய செய்திகள்

கடந்த நிதிஆண்டின் 4-வது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.1 சதவீதமாக குறைந்தது

ஒமைக்ரான் வைரஸ் பரவல் காரணமாக, ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன. அதுதான் காரணமாக கருதப்படுகிறது.

தினத்தந்தி

புதுடெல்லி,

கடந்த நிதிஆண்டின் (2021-2022) ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான 4-வது காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.1 சதவீதமாக இருந்தது. இது முந்தைய காலாண்டுடன் (5.4 சதவீதம்) ஒப்பிடுகையில் குறைவாக உள்ளது. ஒமைக்ரான் வைரஸ் பரவல் காரணமாக, 3-வது அலை வீசியதால், ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன. அதுதான் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைந்ததற்கு காரணமாக கருதப்படுகிறது.

முந்தைய 2020-2021 நிதிஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.6 சதவீதம் வீழ்ச்சி அடைந்திருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில், 2021-2022 நிதிஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.7 சதவீதமாக வளர்ச்சி அடைந்துள்ளது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு