புதுடெல்லி,
நடப்பு நிதியாண்டின் முதலாவது காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 18.5 சதவீதமாக இருக்கும் என்று பாரத ஸ்டேட் வங்கியின் பொருளாதார ஆராய்ச்சி துறை கணித்துள்ளது.
பாரத ஸ்டேட் வங்கியின் தலைமை பொருளாதார ஆலோசகர் சவும்யா கந்தி கோஷ் இந்த அறிக்கையை தயாரித்துள்ளார். ரிசர்வ் வங்கி, 21.4 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்தி இருக்கும் என்று கணித்திருந்தது. அதை விட இது குறைவாகும்.