தேசிய செய்திகள்

இந்திய ராணுவத்தின் 28-வது தளபதியாக மனோஜ் முகுந்த் நராவனே பொறுப்பேற்பு

இந்திய ராணுவத்தின் 28-வது தளபதியாக மனோஜ் முகுந்த் நராவனே பொறுப்பேற்று கொண்டார்.

தினத்தந்தி

புதுடெல்லி

சுதந்திரத்திற்குப் பின்னர் இந்திய இராணுவத்தின் 28-வது தளபதியாக ஜெனரல் மனோஜ் முகுந்த் நராவனே இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். மனோஜ் முகுந்த் நராவனேவிடம் பிபின் ராவத் தனது பொறுப்புகளை ஒப்படைத்தார்.

லெப்டினென்ட் ஜெனரல் நராவனே ஜம்மு-காஷ்மீரில் பட்டாலியனில் பணியாற்றியதற்காக சிறப்புமிக்க சேனா பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. நாகாலாந்தில் அசாம் ரைபிள்ஸ் (வடக்கு) அவரது சேவைகளுக்காக விஷிஷ் சேவா பதக்கம் வழங்கப்பட்டு உள்ளது.

இராணுவ பயிற்சி கமெண்ட்டில் ஜி.ஓ.சி-இன்-சி என்ற சிறப்பான சேவைகளுக்காக லெப்டினென்ட் ஜெனரல் நராவனேவுக்கு பரம் விஷித் சேவா பதக்கம் வழங்கப்பட்டு உள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்