புதுடெல்லி,
அவரது வாழ்க்கைப்பாதை, கரடு முரடானது என்று சொன்னால் அது உண்மைதான். ஆரம்பத்தில் ஜார்ஜ் மேத்யூ பெர்னாண்டஸ் என்னும் தங்கள் செல்ல மகன், கத்தோலிக்க பாதிரியாராக வேண்டும் என்பதுதான் அவரது பெற்றோரான ஜான் ஜோசப் பெர்னாண்டஸ், ஆலிஸ் மார்த்தாவின் கனவாக இருந்தது.
கடைசி வரை அவருக்கு உற்ற துணையாக இருந்தவர் ஜெயா ஜெட்லி.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஆங்கிலம் என 10 மொழிகளில் பேசி அசத்தும் ஜார்ஜ் பெர்னாண்டஸ் இப்போது மவுனமாகி விட்டார். மரணம் அவரை அரவணைத்துக்கொண்டு விட்டது.
ஆனாலும் என்ன, இந்திய அரசியல் வரலாற்றில் ஜார்ஜ் பெர்னாண்டஸ் என்ற பெயர் ஒலித்துக்கொண்டுதான் இருக்கும்.