தேசிய செய்திகள்

தேர்தல் கால சலுகை: பெட்ரோல் டேங்கை நிரப்பிக்கொள்ளுங்கள்- ராகுல் காந்தி

‘உங்கள் பெட்ரோல் டேங்குகளை முழுமையாக நிரப்பிக்கொள்ளுங்கள். மோடி அரசின் தேர்தல் கால சலுகை விரைவில் முடியப்போகிறது’ என ராகுல் காந்தி கூறியுள்ளார்.

தினத்தந்தி

உக்ரைன் போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. ஆனாலும் இந்தியாவில் கடந்த சில மாதங்களாக பெட்ரோல்-டீசல் விலை உயரவில்லை. உத்தரபிரதேசம் உள்பட 5 மாநில தேர்தல் காரணமாகவே இந்தியாவில் பெட்ரோல்-டீசலுக்கான விலை உயரவில்லை எனவும், இந்த தேர்தல்கள் முடிந்தவுடன் மீண்டும் இந்த விலை உயரும் எனவும் எதிர்க்கட்சிகள் ஆரூடம் கூறி வருகின்றன. இந்த நிலையில் 5 மாநில தேர்தல் திங்கட்கிழமை முடிவுக்கு வருகிறது. அதைத்தொடர்ந்து பெட்ரோல்-டீசல் விலை உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை முன்வைத்து ராகுல் காந்தி கிண்டலுடன் கூடிய எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் தளத்தில், உங்கள் பெட்ரோல் டேங்குகளை முழுமையாக நிரப்பிக்கொள்ளுங்கள். மோடி அரசின் தேர்தல் கால சலுகை விரைவில் முடியப்போகிறது என கூறியுள்ளார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை