கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

மத்தியப் பிரதேசத்தில் தெருநாய்கள் கடித்ததில் 5 வயது சிறுமி உயிரிழப்பு

மத்தியப் பிரதேசத்தில் தெருநாய்கள் கடித்ததில் 5 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினத்தந்தி

கார்கோன்,

மத்தியப் பிரதேச மாநிலம் கர்கோன் மாவட்டத்தில் நேற்று தெருநாய்கள் கடித்ததில் ஐந்து வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெடியா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகாவா கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

நேற்று பிற்பகலில் சோனியா என்ற 5 வயது சிறுமி தெருவில் வந்து கொண்டிருந்தபோது சுமார் 6 தெருநாய்கள் சிறுமியைத் தாக்கின. கூலித் தொழிலாளியான அவரது தந்தை வேலை செய்து கொண்டிருந்தார். சிறுமி தனியாக இருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது.

இதையடுத்து சிறுமி பெடியாவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அங்கிருந்து மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக சிவில் சர்ஜன் அனார் சிங் சவுகான் தெரிவித்தார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு