தேசிய செய்திகள்

பரீட்சைக்கு செல்வதாக கூறி விட்டு சென்று காதலனை திருமணம் செய்த மாணவி

பரீட்சைக்கு செல்வதாக வீட்டில் கூறி விட்டு சென்ற மாணவி காதலனை திருமணம் செய்து கொண்ட நிலையில் அவர்களை கண்டுப்பிடித்த பெற்றோர் சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர்.#Latesttamilnews

தினத்தந்தி

லக்னோ

உத்தரபிரதேச மாநிலத்தில் அஜய் சென் என்ற இளைஞருக்கும் அவர் வீட்டு அருகில் வசிக்கும் 22 வயதான பாலிடெக் மாணவிக்கும் காதல் மலர்ந்துள்ளது. இதையறிந்த மாணவியின் பெற்றோர் காதலுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததுடன் காதலரை தங்கள் பெண் சந்திக்க முடியாதபடி பார்த்து கொண்டனர். இந்நிலையில், பாலிடெக்னிக் பரீட்சை எழுத செல்வதாக தனது வீட்டில் கூறி விட்டு சென்ற மாணவி அஜய்யை நீதிமன்றத்தில் வைத்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.

பின்னர் இருவரும் தலைமறைவாகியுள்ளனர். இந்நிலையில் தங்களது திருமண சான்றிதழை பெற அஜய் நீதிமன்றத்துக்கு வந்த போது அங்கு இருந்த மாணவியின் குடும்பத்தார் அஜய்யை கடத்தி ஒரு இடத்துக்கு அழைத்து சென்றனர். பின்னர் அவரை சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் தரப்பட அஜய்யை அவர்கள் மீட்டார்கள்.

மாணவியின் பெற்றோர், இரண்டு சகோதரர்கள், உறவினர்கள் என பலர் அஜய்யை அடித்த நிலையில் போலீசார் இது குறித்து விசாரித்து வருகிறார்கள்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்