புதுடெல்லி,
இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள 2019-2020-ம் நிதி ஆண்டுக்கான அறிக்கையில், இழப்பில் இருந்து மீளவும், மீண்டும் பொருளாதார வளர்ச்சியை எட்டவும் பெரிய அளவில் சீர்திருத்தங்கள் தேவை என்று கூறப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், கடந்த சில மாதங்களாக நான் மத்திய அரசுக்கு விடுத்த எச்சரிக்கையை ரிசர்வ் வங்கி இப்போது உறுதி செய்து இருக்கிறது. தொழில் அதிபர்களுக்கு வரிச்சலுகைகள் வழங்குவதற்கு பதிலாக ஏழைகளுக்கு மத்திய அரசு பணம் வழங்க வேண்டும். நுகர்வை அதிகரிப்பதன் மூலமே பொருளாதாரத்தை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்ல முடியும் என்று கூறி இருக்கிறார்.