மோஹாலி
கடந்த 25 ஆண்டுகளில் பொருளாதார கொள்கைகளில் நிலைத்து நிற்பது பெருமைக்குரியது என்றும் அவர் தெரிவித்தார். இதே காலகட்டத்தில் நாட்டின் வருமானம் உயர்ந்து வறுமையின் கடும் பிடியிலிருந்த மக்கள் தொகையின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்று சுட்டிக்காட்டினார் சிங். இன்னும் பல சவால்களை, குறிப்பாக உடல் நலம், கல்வி மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றிலும், வருமானம் மற்றும் சொத்து சேர்ப்பதில் இருக்கும் சமமின்மையை தவிர்க்க முன்னேற்றக்கூடிய வழிமுறைகளை சவால்கள் நிறைந்துள்ளது. இருந்தாலும் தாராளமயமாக்கலின் விரிவாக அணுகுமுறைகளை ஏற்பது தொடர்ந்து இந்தியாவில் நிலவும் என்று சிங் நம்பிக்கைத் தெரிவித்தார்.
சீனா உலகமயமாக்கலின் சாம்பியன் என்றும் சிங் கருத்துக் கூறினார். இந்தியாவில் முன்னேற நிறைய வாய்ப்புகள் இருந்தாலும் உள்ளூர் அளவில் சவால்களை சந்திக்கிறது. இந்தியாவில் மலிவான உழைப்பு கிடைக்கிறது என்று வெளிநாட்டவர் வருவதை சுட்டிக்காட்டிய நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் விரைவில் உற்பத்தி இயந்திரமயமாக ஆகப்போவதையும் சுட்டிக்காட்டி எச்சரிக்கிறார் என்று மன்மோகன் சிங் எடுத்துரைத்தார். அறிவியலின் துணை கொண்டு வறுமை, அறியாமை, வேலையின்மையை நாமே தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று ராமாகிருஷ்ணன் சொல்லியதையும் சிங் குறிப்பிட்டார். நிர்வாக அமைப்பிலும் மாநிலங்கள் அதிகமாக மேம்பாடு அடைய வேண்டிய தேவையுள்ளது என்றார் சிங்.