பனாஜி,
கோவாவில் ஆளும் பாரதீய ஜனதா கட்சியின் வலைதளம் ஹேக்கர்களால் ஹேக் செய்யப்பட்டு உள்ளது. அதன்பின்னர் வலைதள பக்கத்தில், டீம் பி.சி.ஈ. என குழு ஒன்றின் பெயரும், முகமது பிலால் என தனிநபரொருவரின் பெயரும் இடம் பெற்றிருந்தது.
இதுபற்றி கோவா பாரதீய ஜனதா கட்சியின் பொது செயலாளர் தனாவடே எந்த விவரங்களையும் தெரிவிக்க மறுத்து விட்டார்.
எனினும், இது பழைய வலைதளம் என்றும் புதிய வலைதளம் ஹேக் செய்ய முடியாத வகையில் பாதுகாப்பு விசயங்களை கொண்டுள்ளன என அக்கட்சியின் ஐ.டி. பிரிவு பணியாளர் ஒருவர் கூறியுள்ளார். வலைதளம் ஹேக் செய்யப்பட்டது பற்றி போலீசில் புகார் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.