தேசிய செய்திகள்

கோவா சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் பிரமோத் சவாந்த் வெற்றி

கோவா சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் பிரமோத் சவாந்த் வெற்றி பெற்றார்.

தினத்தந்தி

பனாஜி,

கோவா முதல்வராக இருந்த மனோகர் பாரிக்கர் மறைந்த நிலையில், புதிய முதல்வராக பிரமோத் சாவந்த் நேற்று அதிகாலை 2 மணி அளவில் பதவியேற்றார். அதிக உறுப்பினர்களை கொண்ட தனிப்பெரும் கட்சியான தங்களை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என ஆளுநரிடம் காங்கிரஸ் கோரிக்கை விடுத்தது.

இதையடுத்து பாஜக நம்பிக்கை வாக்கெடுப்பு மூலம் தனது பெரும்பான்மையை நிரூபிக்க முடிவு செய்தது. இதன்படி, இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த பாஜகவிற்கு ஆளுநர் அனுமதி அளித்தார். இதற்காக கோவா சட்டமன்ற சிறப்புக் கூட்டம் இன்று காலை 11:30 மணிக்கு கூடியது.

நம்பிக்கை வாக்கெடுப்பில் கோவா முதல்வர் பிரமோத் சவாந்த் வெற்றி பெற்றுள்ளார். 20 எம்.எல்.ஏக்கள் அவருக்கு ஆதரவாக வாக்களித்தனர். 36 உறுப்பினர்களை கொண்ட கோவா சட்டப்பேரவையில் பாஜக அரசு பெரும்பான்மையை நிரூபித்துள்ளது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை