தேசிய செய்திகள்

கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த்-க்கு கொரோனா தொற்று உறுதி

கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த்-க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

பானஜி,

இந்தியாவில் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. கொரோனா தொற்றால் மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் என மக்கள் பிரதிநிதிகளும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த்-க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த், நான் கொரோனா பரிசோதனை செய்து கொண்டேன் அதில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அறிகுறிகள் ஏதும் இல்லாததால் நான் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளேன். வீட்டிலிருந்து எனது பணிகளை தொடர்ந்து செய்வேன். கடந்த காலங்களில் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தி கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்