தேசிய செய்திகள்

அமித்ஷாவுடன் கோவா முதல்-மந்திரி சந்திப்பு

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை கோவா முதல்-மந்திரி பிரமோந்த் சாவந்த் சந்தித்துள்ளார்.

புதுடெல்லி,

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் கோவா முதல்-மந்திரி பிரமோந்த் சாவந்த் வியாழக்கிழமை சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது, மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் சுரங்க பிரச்சினைகள் தொடர்பாக விவாதித்தனர். மேலும், கோவா உள்ளாட்சித் தேர்தல் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இதற்குமுன், உத்தரப் பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், அமித்ஷாவை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.