தேசிய செய்திகள்

கோவாவில் அடுத்த கல்வியாண்டில் புதிய கல்விக்கொள்கை அமல்: முதல் மந்திரி தகவல்

கோவாவில் அடுத்த கல்வியாண்டு முதல் புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படும் என முதல் மந்திரி பிரமோந்த் சாவந்த் தெரிவித்தார்.

தினத்தந்தி

பானஜி,

கோவாவில் அடுத்த கல்வியாண்டு முதல் புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படும் என முதல் மந்திரி பிரமோந்த் சாவந்த் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் கேட்ட பிறகு அடுத்தாண்டு முதல் தொடக்க நிலைக் கல்வி வகுப்பு மாணவர்களுக்கு புதிய கல்வி கொள்கை அமல்படுத்தப்படும்என்றார்.

புதிய கல்விக் கொள்கை குறித்து ஆராய இரண்டு உயர்நிலைக் குழுக்களை கோவா அரசு கடந்தாண்டு நியமித்தது. அந்தக் குழுவின் பரிந்துரை தற்போது அரசுக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கர்நாடகாவிலும் புதிய கல்விக்கொள்கையை அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால், புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்த கர்நாடகாவில் உள்ள எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்