தேசிய செய்திகள்

பொது இடங்களில் மது அருந்துவதற்கு தடை விதிக்க கோவா அரசு முடிவு

பொது இடங்களில் மது அருந்துவதற்கு தடை விதிக்க கோவா மாநில அரசு முடிவு செய்துள்ளது.

தினத்தந்தி

பானஜி,

கோவாவில் பொது இடங்களில் மது அருந்துவதற்கு தடை விதிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளதாக அம்மாநில முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அறிவிப்பானை அடுத்த மாதத்தில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூய்மை இந்தியா தொடர்பான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட கோவா முதல் மந்திரி கூறியதாவது:- கோவாவில் பொது இடத்தில் மது அருந்த கூடாது. அடுத்த 15 தினங்களில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி பொது இடங்களில் மது அருந்துவதற்கான தடை குறித்து அறிவிக்கப்படும்.

மதுக்கடை அருகில் மக்கள் குடிப்பது கண்டறியப்பட்டால் மதுக்கடைக்காரருக்கு அபராதம் விதிக்கப்படும் அல்லது கடையின் உரிமம் ரத்து செய்யப்படும். சாலையோரங்களில் மது குடிப்பவர்கள், மது குடித்த பின்னர் பாட்டில்களை சாலையில் உடைத்துப் போட்டு விடுவதால் பொதுமக்களுக்கு பெரும் இடையூறு ஏற்பட்டு வருகிறது.

இதுபோன்ற சிரமங்களை களைவதால் சுத்தமும், சுகாதாரமும் பேணப்படும் இவ்வாறு அவர் தெரிவித்தார். கோவா மாநிலத்தில் ஏற்கனவே கடற்கரை உள்ளிட்ட சில இடங்களில் மது அருந்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்