தேவனஹள்ளி,
பெங்களூரு தேவனஹள்ளியில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, துபாயில் இருந்து பெங்களூரு வுக்கு வந்த விமான பயணிகள், அவர்களது உடைமைகளில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அப் போது ஒரு பயணியின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரது உடைமையை அதிகாரிகள் தீவிரமாக பரிசோதித்தனர். அப்போது 2 தங்க சங்கிலிகள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, அந்த பயணியை அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடம் இருந்து 443 கிராம் எடை கொண்ட தங்க சங்கிலிகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் மதிப்பு ரூ.67 லட்சத்து 92 ஆயிரம் என்று சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கைதான பயணி மீது விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.