தேசிய செய்திகள்

ஒமைக்ரானுக்கு எதிராக ‘பூஸ்டர் டோஸ்’ தடுப்பூசியால் நல்ல பலன் - ஆய்வு முடிவு

ஒமைக்ரானுக்கு எதிராக ‘பூஸ்டர் டோஸ்’ தடுப்பூசியால் நல்ல பலன் கிடைப்பதாக ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக இந்தியாவில் முன்கள பணியாளர்களுக்கும், சுகாதார பணியாளர்களுக்கும், நாள்பட்ட நோயுடன் போராடுகிற 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கும் முன்எச்சரிக்கை டோஸ் என்ற பெயரில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்படுகிறது.

இந்த நிலையில், கோவேக்சின் தடுப்பூசியை 2-வது டோஸ் செலுத்தி, 6 மாதங்களுக்கு பின்னர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியாக செலுத்திக்கொள்கிறபோது, அது ஒமைக்ரான் மற்றும் டெல்டா வகை உருமாறிய கொரோனா வைரஸ்களுக்கு எதிராக நல்ல பலன் அளிக்கிறது என்று அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள எமோரி பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்த தகவலை கோவேக்சின் தடுப்பூசியை தயாரித்து வினியோகிக்கும் ஐதராபாத் பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு